Sunday, June 20, 2021
spot_img

Latest Posts

மிகுவல் ஒலிவேரா முதலிடம்!

கத்தலன் மோட்டோ ஜிபி பந்தயத்தில், கே.டி.எம் அணியின் வீரரான, மிகுவல் ஒலிவேரா முதலிடம் பிடித்துள்ளார்.

இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்;கப்படும் மோட்டோ ஜிபி, மோட்டார் சைக்கிள் பந்தயம் ஆண்டுக்கு 19 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில்இடம்பெறும் .

அந்த வகையில் ஆண்டின் ஏழாவது சுற்றான கத்தலன் மோட்டோ ஜிபி பந்தயம், பார்சிலோனா- கத்தலோனியா சர்வதேச ஒடுதளத்தில் இடம்பற்றது .

இதில் பந்தய தூரத்தை நோக்கி, 21 வீரர்கள் மோட்டார் சைக்கிளில் சீறிபாய்ந்தனர்.இதில், கே.டி.எம் அணியின் வீரரான மிகுவல் ஒலிவேரா, பந்தய தூரத்தை 40 நிமிடங்கள், 21.749 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளையும் அவர் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து, டுகார்டி அணியின் ஜோஹன் சார்கோ, 0.175 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, அதற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார்.

இவரையடுத்து, மற்றொரு டுகார்டி அணியின் வீரரான ஜெக் மில்லர், 1.990 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கான 16 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இதுவரை நடந்து முடிந்துள்ள ஏழு சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில், யமஹா அணியின் ஃபேபியோ குவார்டாரோ மூன்று வெற்றிகளுடன் 115 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

டுகார்டி அணியின் ஜோஹன் சார்கோ, 101 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் ஜெக் மில்லர் இரண்டு வெற்றிகளுடன் 90 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

எட்டாவது சுற்றான ஜேர்மன் கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் 20ஆம் திகதி சட்ச்சென்ரிங் ஓடுதளத்தில் இடம் பெறவுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

spot_imgspot_img

Don't Miss